பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், உயர்மட்ட பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து பாய்கிறது. எனவே, பரிசல்களை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக இந்தாண்டு மூன்றாவது முறையாக பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி வரை நீர் திறந்து விடப்படுகிறது. எனவே, பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், லிங்காபுரம், காந்தவயல் பகுதியை இணைக்கும் உயர்மட்ட பாலம் தண்ணீரால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாலத்தின் மீது கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிரமத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பரிசல்களை இயக்க முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.