கொடுமுடியாறு நீர் தேக்கத்தில், தண்ணீரின் அளவு ஒரே நாளில் 16 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்…
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியில் உள்ள கொடுமுடியாறு நீர் தேக்கத்தில் தண்ணீரின் அளவு, ஒரே நாளில் 16 அடி உயர்ந்துள்ளது.
இந்த நீர்தேக்கத்தின் மொத்த கொள்ளவு 52 அடியாகும். தற்போது தண்ணீர் இருப்பு 46 அடியாக உள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் பட்சத்தில், கொடுமுடியாறு முழுக் கொள்ளளவை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வள்ளியூரான் கால்வாய் மூலம் அப்பகுதியில் உள்ள பல்வேறு குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்சியடைந்துள்ளனர்.