பீகாரில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உருவ பொம்மைகளை பாடை கட்டி தூக்கிச் சென்று எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பப்பு யாதவின் ஜன அதிகார் கட்சியினர், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இருதினங்களுக்கு முன் பாட்னாவில் அவர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.
இந்நிலையில் இன்று பாட்னாவில் திரண்ட ஜன அதிகார் கட்சியினர், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கவனிக்காமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது நாற்காலியை காப்பாற்றும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவதாக முழக்கம் எழுப்பியவாறு பேரணியாக புறப்பட்டனர்.
பேரணியில் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி ஆகியோரின் உருவபொம்மையை பாடையாக கட்டி தூக்கிச் சென்று எரித்தனர்.