ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, எழிலக வளாகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதேபோன்று, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது போய்ஸ் கார்டனில் பணிப்பெண்களாக பணியாற்றிய தஞ்சையை சேர்ந்த தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகிய 3 பேர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்

Exit mobile version