சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலால் வேதனையடைந்த பொது மக்கள்

சென்னையில் சில மயானங்களில் சடலங்களை எரியூட்ட பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏறபட்டுள்ளது.

ஆனால், அவ்வாறான சூழல் எங்கும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது.

 

சென்னையில் உள்ள 5 முக்கிய அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட கொரோனா படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளன.

தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், தினசரி மரணங்களும் அதிகரித்துள்ளன.

சென்னை அம்பத்தூர் மின் மயானத்தில் கொரோனா நோயாளிகளின் உடலை எரியூட்ட 6 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை எரிக்க டோக்கன் விநியோகிக்கப்படுவதால், கொரோனா நோயாளிகளின் சடலங்களுடன் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.

கள நிலவரம் இவ்வாறு இருக்க, இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் இதைப்போன்று எங்கும் நடக்கவில்லை என்று பூசி மழுப்பியுள்ளார்.

மேலும், டெல்லியில் நடந்த சம்பவங்களை பார்த்து விட்டு இது போன்ற கேள்விகள் கேட்கக் கூடாது என்று செய்தியாளர்களுக்கு கட்டளையிடுகிறார்…

மயானங்களில் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலையை ஏற்படுத்தாமல், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கும் நிலையில், அமைச்சரின் பேச்சு பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை கூட்டும் வகையில் அமைந்துள்ளது.

 

 

Exit mobile version