கோபிசெட்டிபாளையம் அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்தியதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்த வெளி கழிப்பிடத்தை தவிர்க்கும் வகையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இதுதவிர மத்திய குழு ஆய்வின் அடிப்படையில், 650 தனிநபர் கழிப்பிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும்,சுகாதாரத்தை பேணிகாத்து தூய்மை இந்தியா திட்டத்தில் பயனடைந்துள்ள பேரூராட்சிக்கு குடியரசு தலைவர் விருது கிடைத்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.