தமிழக முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் யானைக்கால் நோயின் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தில் சுகாதாரத்துறை குழுவினர் மக்களுக்கு யானைக்கால் நோய் தாக்கம் இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். சுகாதார ஆய்வாளர்கள் 10 குழுக்களாக பிரிந்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வீடுகளுக்கு நேரில் சென்று ரத்த மாதிரிகளை சேகரித்தனர். இந்த கிராமத்தில் மட்டும் 540 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.