நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு, தலைமையாசிரியர் உதவ வேண்டும் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. நவம்பர் 30-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மற்றும் கிராமபுற மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் சில மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தவிர்க்க, நீட் தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் எனவும், இதனை கண்காணித்து முதன்மை கல்வி அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version