உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக வங்கியின் தலைவராக இருந்த தென் கொரியாவின் ஜிம் யோங் கிம் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, கிறிஸ்டாலினா ஜியார்ஜியவா தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார். உலக வங்கியின் மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதாக மற்ற நாடுகள் குற்றச்சாட்டுகள் கூறி வரும் நிலையில், உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நாவின் அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹாலேவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.