பள்ளி தலைமையாசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து 75 சவரன் நகை மற்றும் 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள். தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் சனிக்கிழமை இரவு இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். காலையில் எழுந்து போது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தோணியம்மாள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 75 சவரன் நகை மற்றும் 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது.