மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தேவர் அமைப்பினர் போராட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வலியுறுத்தி மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட தேவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வலியுறுத்தி தேவர் அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 20ஆம் தேதி மதுரையில் போராட்டம் நடத்திய அவர்கள், உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று மதுரை ரயில்நிலையத்தை முற்றுகையிட முயன்ற தேவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

Exit mobile version