மாணவ மாணவிகளின் இல்லங்களுக்கே சென்று எவ்வித கட்டணமும் வாங்காமல் ஒவியம் கற்றுத்தரும் ஓவிய ஆசிரியர் குறித்த செய்தித் தொகுப்பு.. ஓவியம் என்பது அதிநுட்பமான அதே நேரம் பொறுமைமிகுந்த கலை.. எல்லோராலும் கற்றுக்கொள்ள இயலாத அரிய கலையாகும். விருதுநகர் அருகே பெத்தனாட்சி நகரில், மது ஓவியப் பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் மாயகிருஷ்ணன்.
இவர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தற்போது பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அத்துடன், தான் நடத்திவரு ஓவியப்பயிற்சிப் பள்ளி மூலமும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஓவியக்கலையைக் கற்றுக்கொடுத்து வருகிறார். இவருடைய பயிற்சிப்பள்ளியில் ஏராளமான மாணவமாணவிகள் பயின்றுவருகின்றனர். சிறப்பாகப் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சியின் நிறைவில் சான்றிதழும் வழங்குகிறார், ஓவியர், மாயகிருஷ்ணன்.
தற்போது, கொரனோ ஊரடங்கு காரணமாக பள்ளி திறக்கப்படாததால் மாணவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று இவர் ஓவியப்பயிற்சி அளித்துவருகிறார். மாணவர்கள் கற்றுக்கொள்ளும் கலைப்பயிற்சியில் இடைவெளி இல்லாமல் தடங்கலின்றி முழுமையாக அவர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்ற மாயகிருஷ்ணனின் எண்ணம், போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.