கொடநாடு விவகாரத்தில் தனக்கு எந்ததொடர்பும் இல்லாததால், அதுகுறித்து எந்தவொரு வழக்கையும் சந்திக்க தயார் என முதலமைச்சர் பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
மதுரையில் நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து அதிமுக சார்பில் மாபெரும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு போட்டியிடும் வி.வி.ஆர்.ராஜ்சத்யனுக்கு ஆதரவுதெரிவித்து முதலமைச்சர் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் குற்றாவளிகளுக்கு ஜாமின் எடுத்தஸ்டாலினை கூலிப்படைத்தலைவர் என்று அழைப்பதே சரி என விமர்சித்தார். மேலும் கொடநாடு விவகாரத்தில் தனக்கு எந்ததொடர்பும் இல்லாததால், அதுகுறித்து எந்தவொரு வழக்கையும் சந்திக்க தயார் எனவும் பதிலுரைத்தார்.