சபரிமலையில் பக்தர்களுக்கு கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தி அளிக்கிறது – உயர்நீதிமன்ற மூவர் குழு

சபரிமலையில் பக்தர்களுக்கு கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தி அளிப்பதாக மாநில உயர் நீதிமன்றம் நியமித்துள்ள மூவர் குழு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தால் அங்கு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கெடுபிடிகளால் அங்கு பக்தர்களின் வருகை குறைந்துள்ளது.

சபரிமலை கோயில் கடந்த 16-ம் தேதி முதல் மண்டல பூஜைக்கென துவங்கியுள்ள நிலையில், இந்த கெடுபிடிகளுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், இதுகுறித்து அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்துள்ளது.

இந்தக் குழு சபரிமலையில் ஆய்வை துவங்கியுள்ள நிலையில், சபரிமலையில் நிலக்கல் மற்றும் பம்பையில் பக்தர்களுக்கு அரசு செய்துள்ள வசதிகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version