பேரீச்சம்பழம் இறக்குமதி – கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு!

சட்டவிரோதமாக பேரீச்சம்பழம் இறக்குமதி செய்த புகாரில், கேரள அரசு மீது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக தூதரகம் வழியாக மத நூல்கள் கொண்ட பார்சல் மற்றும் பேரிச்சம்பழத்தை பெற்றுக்கொண்டதாக கேரள அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசு மீது 2 வழக்குகளை சுங்கத்துறை பதிவு செய்துள்ளது. தூதரக அதிகாரிகள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்து வைத்திருந்த அந்தப் பொருட்களை, அதிகாரத்தில் உள்ள சில நபர்கள் பரிசாக பெற்றுச் சென்றதாகவும், அவற்றை குறிப்பிட்ட இடங்களில் விநியோகம் செய்வதற்காக பெற்றதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு 18,000 கிலோ பேரிச்சம்பழத்தையும், இந்தாண்டில் இஸ்லாமிய மத நூல்கள் கொண்ட 4,000 கிலோ பார்சல்களையும் இறக்குமதி செய்ய வரி விலக்கு அளித்துள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version