ஹவாலா பணம் தருவதாக 18லட்சம் ரூபாய் மோசடி!

கன்னியாகுமரியில், ஹவாலா பணம் தருவதாகக்கூறி, 18 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, ஒரு கும்பல் கணக்கில் உள்ள பணத்தை அளித்து, அதிகளவிலான ஹவாலா பணத்தை பெறலாம் என தெரிவித்து மோசடி செய்து வந்துள்ளது. மேலும், பணத்தை பெற்றதும், போலீசார் வருவதாகக் கூறி தப்பியோடுவது போல், பணத்தை கொள்ளையடித்துச் செல்வதும் அவர்களின் வாடிக்கையாக இருந்துள்ளது. இந்த மோசடி கும்பலின் வலையில் சிக்கி, கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்த ஜபமணி என்பவர் 18 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஒரு கோடி ரூபாய் பணத்தை மாற்றவேண்டும் என பொறி வைத்து 2 பேரை தனிப்படை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பேப்பர் பண்டல்கள் மீது 500 ரூபாய் பணத்தை ஒட்டிவைத்து ஏற்றியது தெரியவந்தது. இதில் தொடர்புடையவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version