ஹரியானா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
பிரதமர் மோடியின் பிரசாரத்திற்காக, ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கிய நிலையில், வரும் 14, 15 மற்றும் 18-ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ஹரியானாவில் மனோகர் லால் கட்டாரை முதலமைச்சராக கொண்டு, தற்போது பாரதி ஜனதாவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.