மெலோடி கிங் ஹாரிஸ் ஜெயராஜுக்கு டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

 தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு  ரசிகர்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்த முதல் படத்திலேயே இசை சிக்சர் அடித்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத்தொடர்ந்து மஜ்னு , லேசா லேசா, சாமி ,கோவில் , காக்க காக்க  , செல்லமே , உள்ளம் கேட்குமே , வாரணம் ஆயிரம் எங்கேயும் காதல் 7 ஆம் அறிவு ,  என்னை அறிந்தால் ,அனேகன்  என பல்வேறு ஹிட்டான பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு  ஹாரிஸ் ஜெயராஜ்  கொடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.  

 

 

 

இதனை அடுத்து கடந்தாண்டு தேவ், காப்பன் படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது லெஜெண்ட் சரவணா ஸ்டோர் ஓனர் நடிக்கும் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

 

 

 

இந்நிலையில் இன்று தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ட்விட்டரில் HappybirthdayHarrisJayaraj என்ற ஹேஷ்டேக்கை  உருவாக்கி  ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

Exit mobile version