ஹர்பஜன் சிங்க்கு வில்லனா ஆக்‌ஷன் கிங்

கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், ‘பிரண்ட்ஷிப்’  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். ஹர்பஜன் சிங் ஜோடியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா. இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹீரோவாக இருந்து தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வரும் அர்ஜுன் முதன்முறையாக ஹர்பஜன் சிங்குக்கு வில்லனாக நடிக்க இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version