இந்தப் பெண்ணின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம் – கோமதிக்கு ஹர்பஜனின் வாழ்த்து செய்தி

ஆசிய தடகள ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த கோமதி மாரிமுத்துவை வாழ்த்தி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ள செய்தி வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் அந்த அணி ஜெயித்தாலும், தோற்றாலும் தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.

இந்த நிலையில் தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள ஓட்டப்போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாாிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார்.

இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் ஹர்பஜன் சிங்கும் தன் பங்கிற்கு கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Exit mobile version