ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் சென்னை அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன்மூலம் தான் விளையாடிய 10 சீசனில் 8 வது முறையாக சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் சென்றுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பைஅணியை சென்னை அணி சந்திக்கின்றது.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let’s do it, #CSK pic.twitter.com/UxLfDY8w4o
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 10, 2019
இந்நிலையில் சென்னை அணி குறித்தும், நேற்றைய வெற்றி குறித்தும் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். அதில், “வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்” என அணியை புகழ்ந்துள்ளார். கடந்த சீசனில் இருந்தே அவர் சென்னை அணி குறித்து தமிழ் மொழியில் ட்வீட்கள் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.