அருணாச்சலபுரத்தில் நல்ல விளைச்சல் தந்துள்ள அகத்திக்கீரை : விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் அருணாச்சலபுரத்தில் அகத்திக்கீரை விளைச்சல் சிறப்பாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடையநல்லூரை அடுத்த அருணாச்சலபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் இயற்கை முறையில் அகத்திக்கீரை பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு கோடை மழை பொழிந்ததால் அகத்திக்கீரை விளைச்சல் சிறப்பாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டு கீரை 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆவதால், நல்ல லாபம் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர். 

Exit mobile version