கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த விவசாயி.!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் 18வது நாளாக டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களில் திருத்தங்களைச் செய்வதாக மத்திய அரசு கூறி வருகிறது. சட்டங்களை திரும்பப் பெறுவதைத் தவிர வேறதையும் ஏற்க முடியாது என, விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பதினெட்டாவது நாளாக விவசாயிகளின் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. இன்று டெல்லி-ஜெய்பூர் நெடுஞ்சாலையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதாகவும், நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதனால், ராஜஸ்தான் விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்துள்ளனர். இதனிடையே, டெல்லியை சுற்றி, சிங்கு, திக்ரி, காசிப்பூர், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தடுப்பு அரண்களை அமைத்துள்ளதுடன், காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காசிப்பூர் சுங்கச்சாவடி முன் போராடும் விவசாயிகளுக்கு, பஞ்சாப்பை சேர்ந்த இரட்டையர்கள், குளிரைத் தாங்கும் உடைகளை இலவசமாக வழங்கினர்.

இதனிடையே, டெல்லியின் திக்ரி எல்லையில், விவசாயி ஒருவரின் மகளுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. சிதாக் எனும் சிறுமி, தனது10வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், போராட்டத்தில் கலந்துக் கொண்ட அவரது தந்தை, மற்ற விவசாயிகளுடன் சேர்ந்து மகளின் பிறந்தநாளை கொண்டாடினார்.

Exit mobile version