திரைக்காக தமன்னா என்று பெயரை மாற்றிவைத்துகொண்டு சமீப காலமாக இளைஞர்களை தன் இஞ்சி இடுப்பால் இழுத்துப்பிடித்திருந்த தமன்னாவுக்கு இன்று ஹேப்பி பர்த்டே.
தமன்னா (Tamanna Bhatia, பிறப்பு டிசம்பர் 21, 1989) ஒரு இந்தி திரைப்பட நடிகையாகத் தன் திரைப் பயனத்தைத் தொடங்கியவர் . 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். மூன்று மாணவிகள் எரிப்பு சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.
இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா , கொய்யா என கிடைத்த எல்லாப் படங்களிலும் சிறப்பாக நடித்து வளர்ந்தார்.
ஒரு காலத்தில் திரவிட இனமாக் அறியப்பட்ட சிந்தி இனத்தைச் சேர்ந்த இவர் 1989 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி சந்தோஷ் மற்றும் ரஜனி பாட்டியா ஆகியோருக்கு மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தார். அவருக்கு ஆனந்த் என்கிற ஒரு அண்ணன் உள்ளார். அவரது தந்தை ஒரு வைர வியாபாரி ஆவார். அவர் மும்பையில் உள்ள மனேக்ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளி இல் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். வெறும் பிரபலமான நடிகை என்று மட்டும் பார்க்கப்பட்ட நடிகைகளின் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் தெரியுமா என்று கரைந்த தமன்னாவின் கருத்து பெருமளவில் திரைத்துரையில் கவனம் பெற்ற ஒன்று.
அவர் பேசியதாவது,
நடிகைகள் என்றால் சுகங்களை அனுபவிக்கிறவர்கள் என்ற தவறான எண்ணம் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது.
நாங்களும் நெருக்கடியில் வாழ்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிவது இல்லை. நடிகைகள் யாரும் இங்கு முழுமையான மகிழ்ச்சியில் இல்லை. இரவு பகல் பாராமல் படப்பிடிப்புகளில் கலந்துகொள்கிறோம். ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் உழைக்கிறோம்.
படப்பிடிப்பில் ‘ஷாட் ரெடி’ என்று அழைத்ததும் போய் நிற்க வேண்டும். மனதில் என்ன கஷ்ட நஷ்டம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் நடிக்க வேண்டும்.
இப்போதைய நடிகைகள் பல மொழிகளில் நடிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை என்று பயணத்திலேயே கழிகிறது.
சொந்தப் பணிகளுக்காக நேரம் ஒதுக்க முடியாது. குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது. கதாநாயகிகள் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். பெயர், புகழ் இருக்கிறது என்று எளிதாக சொல்லி விடுகிறவர்களுக்கு எங்களுக்கு பின்னால் இருக்கும் இதுபோன்ற கஷ்டங்கள் தெரிவது இல்லை.
நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் படப்பிடிப்புகளுக்காக ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே தான் இருக்கிறேன். விரும்பிய உணவுகளை என்னால் சாப்பிட முடியவில்லை. அழகுக்காக உடற்பயிற்சிகள் செய்து உடம்பை வருத்த வேண்டி உள்ளது. சாதாரணப் பெண்களை பார்க்கும்போது நம்மால் அவர்களைப்போல் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும்.
சினிமாவில் சந்தோஷமே இல்லை என்று சொல்லவில்லை. நாங்கள் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சினிமாவில் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புகளுக்காகவும் அலைய வேண்டி உள்ளது. டைரக்டர்கள் தான் இங்கு கேப்டன். அவர்கள் சொல்வதைத் தான் கேட்டு நடிக்க வேண்டும்.
என தமன்னா கூறியுள்ளார்.
எனினும் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்தும் வருகிறார். எது எப்படியோ இனிவரும் காலங்கள் உங்களுக்கு மனநிரைவையும் நிம்மதியையும் தரட்டும் தமன்.
ஹேப்பி பர்த்டே