சர்ச்சையில் சிக்கிய அந்தமான் யானை காப்பகத்தில் ஒப்படைப்பு

சர்ச்சையில் சிக்கிய அந்தமான் மலாச்சி யானை, நீதிமன்ற உத்தரவை அடுத்து, திருச்சி யானைகள் காப்பகத்தில் விடப்பட்டது.

அந்தமானைச் சேர்ந்த ஆங் மைண்ட் என்பவரின் மனைவி மசன், மலாச்சி யானையை கடந்த 2007ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தானமாக வழங்கினர். யானையை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பயன்படுத்துவதாக வனவிலங்கு ஆர்வலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். இதன் பெயரில் உத்தரவு வழங்கிய உயர் நீதிமன்றம், யானைப்பாகனிடம் யானை தொடர்பான உரிய ஆவணம் இல்லை எனக் கூறி, மலாச்சி யானையை காப்பகத்தில் விட உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மதுரை வனத்துறை அதிகாரிகள், யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்து பின்னர், திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூர் அருகே உள்ள யானைகள் காப்பகத்தில் மலாச்சி யானையை விட்டுச் சென்றனர்.

Exit mobile version