161 கூடுதல் மருத்துவ படிப்பு இடங்கள் ஒப்படைப்பு – பயன் பெறும் தமிழக மாணவர்கள்

அகில இந்திய கோட்டாவில் 161 எம். பி. பி. எஸ். மற்றும் பி. டி. எஸ். இடங்கள் மாநில அரசுக்கு ஒப்படைக்கட்டுள்ளதால், தமிழக மாணவர்கள் சிலருக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ கலந்தாய்வில் அகில இந்திய இரண்டாவது சுற்று முடிவடைந்துள்ள நிலையில், 132  எம் பி பி எஸ் மற்றும் 29 பி டி எஸ் இடங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் தமிழகத்தில் நடைபெறும் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ளப்படும்.

ராஜா முத்தையா கல்லூரியில் 17 இடங்கள், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 14 இடங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 7 இடங்கள், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் 5 இடங்கள் என மொத்தம் 132 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக கிடைக்கவுள்ளன. 

இதே போன்று சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா கல்லூரியில் 29 பி. டி. எஸ். இடங்கள் உள்ளன. மருத்துவ படிப்பிற்கு தற்போது நடைபெற்று வரும் முதல் சுற்று கலந்தாய்வு, வரும் 14ம் தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version