ஊனத்தை ஊனமாக்கிய மாற்றுத்திறனாளி வீரர்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. அகில இந்திய டென்னிஸ் சங்கம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஊனத்தை மனதில் வைத்து கொள்ளாமல், மகத்தான திறமைகளை, வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் வெளிபடுத்தி வருகிறார்கள். கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய போட்டியில், 32 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் என 37 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

தங்களது சக்கர நாற்காலிகளில் சிறிதும் மனம் தளராமல், ஓடி ஓடி விளையாடுவது மற்றவர்களுக்கு கொடுக்கும் நம்பிக்கை ஊட்டச்சத்தாகவே பார்க்கப்படுகிறது. அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து, இந்தியாவிற்கு வெற்றியை பெற்று தருவதே இலக்கு என்கிறார், தொடர்ந்து ஆதரவு அளித்து பல்வேறு உதவிகளை செய்து வரும் தமிழக அரசு, மேலும் எங்களுக்கு உதவிகளை செய்தால் எங்களால் மேலும் சாதிக்க முடியும் என்று கூறுகிறார், வெற்றி பெற்ற வீரர் பாலச்சந்தர்..

தனது 10 வயதில் பந்து பொறுக்கிப்போடும் சிறுவனாக டென்னிஸ் விளையாட்டில் கால் பதித்த சேகர், இன்று டென்னிஸ் விளையாட்டில் தனது வெற்றியையும் பதித்துள்ளார். தேவையான ஒத்துழைப்புகள் கிடைத்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் விளையாடுவேன் என தன்னம்பிக்கை வெளிபடுத்தியுள்ளார் வெற்றியாளர் சேகர்.

Exit mobile version