தமிழகத்திலிருந்து 4,464 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதாக ஹஜ் கமிட்டி அறிவிப்பு

தமிழகத்திலிருந்து, இந்த ஆண்டு நான்கு ஆயிரத்து நானூற்றி அறுபத்து நான்கு பேர் ஹஜ் புனித பயணத்திற்காக, செல்வதாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 4,464 பேர் ஜூலை 31ஆம் தேதி முதல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர். ஜூலை 31 ஆம் தேதி இரவு 11.40 மணியளவில் புறப்படும் விமானத்தில் முதற்கட்டமாக 423 பயணிக்கின்றனர். அதனை தொடர்ந்து நாளொன்றுக்கு மூன்று விமானங்கள் என வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி வரை புனித பயணம் மேற்கொள்ள உள்ளனர். புனித பயணம் மேற்கொள்பவர்களை வழியனுப்ப தமிழ்நாடு ஹஜ் கமிட்டியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலர் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையம் வந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கான நிதியை 6 கோடியாக உயர்த்தி வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவின் நலனுக்காக ஹஜ் பயணிகள் பிராத்தனை செய்ய வேண்டும் என அவர்களிடம் கூறி உள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version