மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதின் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருவதால் அந்நாட்டுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஹபீஸ் சயீது தலைமையிலான ஹமாத்- உத்-தவா தீவிரவாத இயக்கத்திற்கும் அதன் அறக்கட்டளையான ஃபாலா- இ- இன்சானியாத் அறக்கட்டளைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.