மும்பை தீவிரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளி ஹஃபீஸ் சயீத் கைது

மும்பை தீவிரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான, ஹஃபீஸ் சஹீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீத், தீவிரவாதத்துக்கு நிதி கொடுத்து உதவிய வழக்கில், அந்நாட்டின் தீவிரவாத ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக சர்வதேச தீவிரவாதியான சயீத், லாகூரிலிருந்து குஜ்ரன்வாலாவுக்கு தப்பமுயன்றபோது அந்நாட்டின் தீவிரவாத ஒழிப்புத்துறையினரிடம் பிடிபட்டார். சயீதை கைதுசெய்ய இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் பணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version