ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஹேக்கர்கள் ஊருடுருவியுள்ளனர். ஃபேஸ்புக்கை ஒப்பிடும் போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ராகிராமின் பாதுகாப்பு மேம்பட்டதாக இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் Our Mine என்ற பெயரில் வந்த ஹேக்கர்கள் பேஸ்புக்கின் அதிகாரபூர்வ டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊடுருவினர். மேலும் பேஸ்புக்கையும் ஹேக் செய்ய முடியும் என்றும் ஆனால் பேஸ்புக்கின் பாதுகாப்பு ட்விட்டரைவிட கொஞ்சம் மேம்பட்டதாக இருக்கிறது என்றும் தங்கள் அதிகாரப் பூர்வ வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்
இந்நிலையில் டுவிட்டரில் ஃபேஸ்புக்கின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அந்நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. அதே போல் ஃபேஸ்புக் நிறுவனமும் தங்களது அதிகாரபூர்வ பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. ‘Our Mine’ என்ற இந்த ஹேக்கர்கள்தான் இதற்கு முன் பல பிரபலமான தளங்களை ஊடுருவினர் என்பது குறிப்பிடத்தக்கது.