ஸ்டூடியோக்களின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்யும் ஹேக்கர்கள்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை வீடியோ எடிட் செய்பவரின் கம்ப்யூட்டரை ஹேக் செய்த ஹேக்கர்கள் 490 டாலர் கொடுத்தால் விடுவிப்பதாக இமெயில் மிரட்டல் விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் சண்முகம் என்பவர் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை வீடியோவாக பதிவு செய்யும் ஸ்டூடியோ வைத்துள்ளார். இந்த நிலையில் இவரது கம்ப்யூட்டரை ஹேக் செய்த ஹேக்கர்கள், 72 மணி நேரத்தில் தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், 490 டாலர் மட்டும் கட்டவேண்டும் என்றும் இமெயில் அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் பல ஸ்டூடியோகளை ஹேக் செய்யும் ஹேக்கர்கள் பணம் கேட்டு மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version