துருக்கிய ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது அமிதாப்பச்சனின் ட்விட்டர் பக்கம்

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கம் பாகிஸ்தான் ஆதரவு துருக்கிய ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு துருக்கிய ஹேக்கர்கள் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்துள்ளனர். அதில் அமிதாப் பச்சனின் புகைப்படத்திற்கு பதிலாக பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானின் புகைப்படத்தை வைத்திருக்கும் ஹேக்கர்கள், லவ் பாகிஸ்தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஐஸ்லாந்து நாட்டில் துருக்கிய கால்பந்தாட்ட வீரர்களை அவமதித்தற்கு தங்களின் எதிர்ப்புகளை அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தாங்கள் பொறுமையாக பேசிவருவதாக குறிப்பிட்டிருக்கும் ஹேக்கர்கள், அதேசமயம் மிகப்பெரிய சைபர் தாக்குதலை நிகழ்த்த இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கம் உடனடியாக நீக்கம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் ஆதரவு துருக்கிய ஹேக்கர்களின் இந்த சைபர் தாக்குதல் மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version