திருச்சியில் ஏழரை லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி பழையை பால்பண்ணை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஓசூரிலிருந்து திருச்சி வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த லாரியில் 50 மூட்டைகளில் ஏழரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த லாரியை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்தனர். ஓட்டுநர் காளிதாஸிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.