குந்தாரப் பள்ளி மாட்டுச்சந்தையில் இன்று ஒருநாள் மட்டும் சுமார் 3 கோடி அளவில் வர்த்தகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப் பள்ளி மாட்டுச்சந்தையில் இன்று ஒருநாள் மட்டும் சுமார் 3 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் மாட்டுச்சந்தை மிகவும் பிரபலமானது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற குந்தாரப்பள்ளி மாட்டுச்சந்தையில், மாடுகளை வாங்குவதற்காக, ஏராளமானோர் குவிந்தனர். வழக்கமாக ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனையாகும் மாடுகள், இன்று 30 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது
இதனால், இன்று ஒரே நாளில் மட்டும், குந்தாரப்பள்ளி மாட்டுச்சந்தையில், 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version