காஷ்மீரில் தீவிரவாதிகள் -பாதுகாப்புப் படையினரிடையே துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்து வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சிகள் தொடர்கதையாகி வருகிறது. தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் அரசு நிறுத்தாதவரையில் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று இந்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ள போதிலும், இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டமான அனந்த்நாக்கின் வெரிநாக் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Exit mobile version