ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டங்களில் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ள போதிலும், தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தின் சோப்பூர் பகுதியில் உள்ள வார்போராவில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.