கும்மிடிப்பூண்டி-சென்னை செல்லும் ரயில்கள் 2 மணி நேரம் காலதாமதமாக இயக்கம்

கும்மிடிப்பூண்டி – சென்னை செல்லும் புறநகர் ரயில்கள் 2 மணி நேரம் கால தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் அவதியடைந்தனர்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு சென்னை புறப்பட வேண்டிய புறநகர் ரயிலில் பிரேக் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். பழுது சரிசெய்ய காலதாமதம் ஏற்பட்ட நிலையில் அதற்கு பிறகு சென்னைக்கு செல்ல வேண்டிய புறநகர் ரயில்களும் இயக்கப்படவில்லை. இதனால் சென்னை செல்வதற்காக பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் காத்திருந்த ரயில் பயணிகள் அவதியடைந்தனர். ரயிலில் ஏற்பட்ட பழுது முற்றிலுமாக சரி செய்ய முடியாததால் அதற்கு பிறகு இயக்கப்பட வேண்டிய புறநகர் ரயில்கள் இரண்டு மணி நேர கால தாமதத்திற்கு பிறகு சென்னைக்கு இயக்கப்பட்டன. பிரேக் பழுது ஏற்பட்ட ரயிலை ரயில்வே பணிமனைக்கு கொண்டு சென்று பழுது நீக்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டனர். 2 மணி நேரம் புறநகர் கால தாமதம் ஏற்பட்டதால் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என அனைத்து பயணிகளும் கடும் அவதிக்குள்ளாயினர்.

Exit mobile version