5% இட ஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் இன மக்கள் 6-வது நாளாக போராட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தில், 5 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி இன்று 6 வது நாளாக குஜ்ஜார் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் அரசு பதவியேற்ற இரண்டு மாதங்களில் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ள அவர்கள், ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் ரயில், சாலை போக்குவரத்துகளை தடுத்து வைத்துள்ளனர். சவாய் மாதப்புரில், தொடர்ந்து 6 வது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குஜ்ஜார் இன தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லாவின் மகன் விஜய் பைன்ஸ்லாவிடம், அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சிகார் எனுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையை மறித்த போராட்டக்காரர்கள், சாலையின் நடுவே மரங்களை வெட்டிப்போட்டும், டயர்களுக்கு தீவைத்தும் போக்குவரத்தை தடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

Exit mobile version