12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத் தேர்வை வாட்ஸ் அப் மூலம் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்ஸ் அப்பில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் வினாத்தாள்களை அனுப்பவும், வினாத்தாளுக்கான உரிய விடைகளை தனி தாளில் எழுதி பெற்றோர் கையொப்பத்துடன் படம் பிடித்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்ட பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும், வாட்ஸ் அப் குழுக்களில் வேறு எந்த ஒரு பதிவையும் பதிவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.