பள்ளிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழ்நாட்டில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் ஒன்றாம் தேதி, 9ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளை திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் சுழற்சி முறையில் இயங்கும் என்றும், பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே பாதுகாப்பான இடைவெளியோடு அமர வைக்க வேண்டும் என்றும்,

வகுப்பறையில் மீதி இடம் இருந்தால் கூடுதல் மாணவர்களை பாதுகாப்பான இடைவெளியோடு அமர வைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்கவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசனி மற்றும் கைகள் கழுவ தண்ணீர் இருப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ள ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது என்றும்,

மாணவர்களுக்கான சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானவற்றை வழங்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version