கூடலூரில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை, நின்றதன் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் பகுதியில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைத்தது. இந்த நிலையில், மழை நின்றதை தொடர்ந்து முகாமில் தங்கியிருந்த அனைவரும் வீடு திரும்பினர். கன மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரியில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.