டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் நவம்பர் மாதத்தை விட சுமார் 3 ஆயிரம் கோடி குறைவாக வசூலாகியுள்ளது
டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 94 ஆயிரத்து 726 கோடியாக குறைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 97 ஆயிரத்து 637 கோடி வசூலாகியிருந்த நிலையில் டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடியும் ஆக்டோபர் மாதம் 1 லட்சத்து 710 கோடியும் வசூலாகியிருந்தது.கடந்த 2017 ம் ஆண்டு நவம்பர் மாதம் மிக குறைந்த அளவாக 83 ஆயிரத்து 716 கோடியும் கடந்த 2018 ஆண்டில் ஜனவரி மாதம் மிக குறைவாக 88 ஆயிரத்து 47 கோடியும் வசூலாகி இருந்தது.