மாநிலத்தின் நிதி தன்னாட்சியைக் கொண்டு பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மின்சாரம் ஆகியவை GST வரி விதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் GST கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கோவாவில் நடைபெற்று வரும் GST கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், GSTசட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வரி விலக்குகளை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்து தமிழகத்திற்கு ஏற்புடையதல்ல எனக் தெரிவித்துள்ளார். GST தொடர்பான மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை மத்திய அரசு விரைந்து அமைத்திட வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டிலுள்ள மீனவ மக்களின் நலன் கருதி மீன் துகள்களுக்கு ஒன்று ஒன்று 2019 முதல் முற்றிலும் வரி விலக்கு அளித்திட வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர், சாதாரண மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டிற்கான பொருட்கள், கைவினையாளர்களால் செய்யப்படும் பொருட்கள், சமய உணர்வு சார்ந்த பொருட்கள் என்ற அடிப்படையில் தமிழகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலித்து சாதகமான முடிவினை எடுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை பட்டியலிட்ட அமைச்சர் ஜெயக்குமார், அவற்றிற்கு வரி விலக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.