நாடு முழுவதும் ஒரே வரி என்ற முறைப்படி மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி என்ற புதிய வரியை அறிமுகம் செய்தது. இந்த வரி வரம்பிற்குள் வருவதற்கு, தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சற்று சுணக்கம் காட்டியது.
இந்நிலையில் ஜி.எஸ்.டி வரியை செலுத்தாமல் பல நிறுவனங்கள் எத்தனித்து வருவது குறித்து ஆய்வு செய்ய, நிதித்துறை அமைச்சகம் ஒரு சிறப்பு பிரிவை அமைத்தது. இந்த பிரிவு நடத்திய ஆய்வின் மூலம், நாடு முழுவதும் 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
போலி ரசீதுகள் தயாரித்ததன் மூலம், 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஜிஎஸ்டி எத்தனிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது போன்று செயல்பட்ட நிறுவனங்களிடம் இருந்து, 736 கோடி ரூபாயை வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தற்போதைய நிதி ஆண்டில், ஜி.எஸ்.டி முறைகேடு நடத்தியதாக பல்வேறு நிறுவனங்கள் மீது இதுவரை 37 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.