பொள்ளாச்சி அருகேயுள்ள தனியார் இரும்பு உருக்கு ஆலையில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மெட்டுவாவி என்ற கிராமத்தில் கோவையை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை உள்ளது. இந்த உருக்கு ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு கட்டிகளுக்கு முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்துவது இல்லை என வந்த புகாரை அடுத்து வணிகவரித்துறையினர் மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் 10 க்கும் மேற்பட்டோர் அதிரடி ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் வரி ஏய்ப்பு செய்ததை உறுதி செய்துள்ள அவர்கள் அதற்கான விளக்கம் கேட்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது கடந்த மூன்று ஆண்டுகளில் மின்சாரம் கட்டணம் முறையாக செலுத்தவில்லை என்பதும் கண்டுபிடிக்கபட்டது.