வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.
இது வரும் ஆண்டுகளில் 75 லட்ச ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 12 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைப்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.