வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த 10ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 32வது ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இணக்க முறையில் வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஒரு சதவீதம் வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றரை கோடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறு சேவைகள் வழங்குவோரின் ஆண்டு மொத்த தொகை 50 லட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் இணக்க வரிமுறையில் 6 சதவீதம் வரி செலுத்திட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் தமிழக அரசு,இதன் மூலம் சிறுசேவை வழங்கும் தனி நபர்கள், சிறு நிறுவனங்கள், வல்லுநர்கள் மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டிய நமூனா மற்றும் வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.