23 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரிகுறைப்பு இன்றுமுதல் அமல்

23 பொருட்கள் மற்றும் சேவை மீதான ஜிஎஸ்டி கட்டண குறைப்பு இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது.டெல்லியில் கடந்த டிசம்பர் 22ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிவிகிதத்தில் பல்வேறு சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, பவர் பேங்க், டிஜிட்டல் கேமராக்கள், வீடியோ கேமராக்கள் உள்ளிட்ட 23 பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி 28 சதவிதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.சரக்கு வாகனங்களுக்கு 3ம் நபர் காப்பீடு பிரிமீயம் தொகை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது.100 ரூபாய்க்கு உட்பட்ட டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமாகவும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.இந்த 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிகுறைப்பு இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது.

Exit mobile version