ஜிசாட் – 29 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக, ஜிசாட் 29 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு, வானிலை, பாதுகாப்பு உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்காக, பி.எஸ்.எல்.வி.,- ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைகோள்களை, இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தி வருகிறது.

அதன்படி, அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக, 3 ஆயிரத்து 423 கிலோ எடையில், ஜிசாட் – 29 என்ற, செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த செயற்கைகோள், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 – டி2 என்ற, ராக்கெட் உதவியுடன், விண்ணில் செலுத்தப்பட்டது.

உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, ஜிசாட் – 29 செயற்கைகோள், குக்கிராமங்களையும் உள்ளடக்கி, நாடு முழுவதும், அதிநவீன தகவல்தொடர்பு சேவையை மேம்படுத்த, முக்கிய பங்காற்றும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. 400 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version